/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் வாகனம் மோதி கோவில் காளை உயிரிழப்பு
/
சாலையில் வாகனம் மோதி கோவில் காளை உயிரிழப்பு
ADDED : செப் 03, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், மூக்காகவுண்டனுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஓராண்டிற்கு மேலாக, கோவில் காளை சுற்றி வந்தது.
நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி -- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மூக்காகவுண்டனுார் பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கோவில் காளை துாக்கி வீசப்பட்டு, சாலையோரம் இறந்து கிடந்தது.
மத்துார் போலீசார் வழக்கு பதிந்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். அப்பகுதி மக்கள், இறந்த கோவில் காளைக்கு, உரிய சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.