ADDED : மார் 15, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் தெப்ப உற்சவம்
தேரோட்டம் தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமையான சவுந்தர்யவள்ளி சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவிலில் இருந்து உற்சவ மூர்த்தியை மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக தேவராஜன் ஏரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு, தெப்ப உற்சவம் நடந்தது. மூன்று முறை ஏரியை சுற்றி உற்சவ மூர்த்தி வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.