/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கதிர் அடிக்கும் களம் அமைக்க எதிர்ப்புபொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

ADDED : மே 03, 2025 12:59 AM
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படி கிராமத்தில், வனப்பகுதியையொட்டி கதிர் அடிக்கும் களம் அமைக்க, சூளகிரி ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், சப்படி கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் வனப்பகுதியையொட்டி கதிர் அடிக்கும் களம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு வழங்கினர்.
இது குறித்து, கிராம மக்கள் கூறும் போது, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வந்து செல்வதால், வனப்பகுதியையொட்டி களம் அமைத்தால், வன விலங்கு களால் பாதிப்பு ஏற்படலாம். குடிமகன்கள் மது அருந்தும் பகுதியாக உள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே, கிராமத்திற்குள் கதிர் அடிக்கும் களத்தை அமைக்க வேண்டும் என்றனர்.