ADDED : ஆக 15, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; தேன்கனிக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்-தவர் வெங்கடேஷ், 53, கட்டட மேஸ்திரி. இவர், சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் செலவு செய்து வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி தட்டி கேட்டுள்ளார்.
கடந்த, 9ல், இது குறித்து ஏற்பட்ட தகராறில், கோபித்துக் கொண்டு வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா நேற்று முன்தினம் அளித்த புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
