ADDED : செப் 21, 2024 07:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது வீட்டருகே கடந்தாண்டு செப்.,13 ல் நிறுத்தி இருந்த, அவரின் செவர்லெட் டவேரே கார் திருட்டு போனது. இதே போன்று கடந்த மே.,5 ல் மூக்காரெட்டிப்பட்டியில், ஆவாலம்பட்டியை சேர்ந்த தேவராஜ், தன் மகள் பேபி வீட்டருகே நிறுத்தி இருந்த பொலிரோ கார் திருட்டு போனது. புகாரின் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். எஸ்.ஐ., கெய்க்வாட் தலைமையில் தனிப்படை எஸ்.எஸ்.ஐ., பழனிசாமி, முருகேசன், பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி டோல் கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொலீரோ காரை ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சேலம் மாவட்டம்,வாழப்பாடி
தாலுகா, அனுப்பூர் அடுத்த மேல் காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் ஐயனாரப்பன், 32, என்பதும், கார் திருடன் என்பதும் தெரிய
வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் திருடு போன, இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.