/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவி இறந்த துக்கம் வியாபாரி மாயம்
/
மனைவி இறந்த துக்கம் வியாபாரி மாயம்
ADDED : டிச 03, 2024 01:17 AM
ஓசூர், டிச. 2-
ஓசூர் கோகுல் நகர் ஜே.பி., லேஅவுட்டை சேர்ந்தவர் அப்பிரெட்டி, 36, வியாபாரி. இவரது மனைவி மோனிகா, 26, கடந்த, 24ல் குடும்ப தகராறில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து மருத்துவமனையில் இருந்து மாயமான அப்பிரெட்டி, வீடு திரும்பவில்லை. அவரது தந்தை பாப்பிரெட்டி, 58, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிப்பர் லாரி மோதி குழந்தை பலி
ஓசூர், டிச. 2-
ஓசூர் அருகே, கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் முகமது மக்சூத் அன்சாரி. இவர் மனைவி குஸ்பதா காத்துான், 21. இவர்களது பெண் குழந்தை உமைரா காத்துான், 3. நேற்று முன்தினம் காலை, 9:15 மணிக்கு, அப்பகுதி கடையில் தின்பண்டம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றாள். சாலையை கடந்தபோது, அதிவேகமாக வந்த மினி டிப்பர் லாரி மோதியதில், குழந்தை உமைரா காத்துான் பலியானாள். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.