ADDED : அக் 03, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்தவர் துளசியப்பா, 70. கடந்த, 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு, ஓசூர் தர்கா பஸ் ஸ்டாப் அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சிகிச்சையில் இருந்த துளசியப்பா, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.