/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர் படுகொலை
/
மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர் படுகொலை
மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர் படுகொலை
மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர் படுகொலை
ADDED : ஆக 16, 2024 05:21 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த விவசாயி முனிராஜ், 68; இவர் மனைவி ரத்தினம்மா; இவர்களுக்கு மூன்று மகள்கள்.
மூத்த மகள் சின்ன புட்டம்மாவின் மகன் வேல்முருகன், 18; பிளஸ் 2 மாணவன். இவருடன் முனிராஜ் டூவீலரில், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை வீடு திரும்பினார். மத்திகிரி கால்நடை பண்ணை அருகே, இரு டூவீலர்களில் வந்த மூவர் மறித்து, முனிராஜை அரிவாளால் வெட்டி கொன்று தப்பினர். மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.கிராமத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து போலீசுக்கு முனிராஜ் தகவல் தெரிவித்து வந்துள்ளார். சின்ன பேளகொண்டப்பள்ளியில் சிலர், கர்நாடகா மாநில மது வகைகளை விற்பதாக தகவல் தந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சின்ன பேளகொண்டபள்ளியை சேர்ந்த நாகராஜ், 55, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.