/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி
/
மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி
ADDED : அக் 30, 2024 01:15 AM
மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி
போச்சம்பள்ளி, அக். 30-
போச்சம்பள்ளி அடுத்த, நக்கல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி, 48; இவர் கிரானைட் கல் ஓட்டும் டாரஸ் லாரி டிரைவர். நேற்று மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பிரிவு சாலையிலுள்ள வாட்டர் சர்வீஸில், லாரியை வாட்டர் சர்வீஸ் செய்ய விட்டார். அப்போது வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் அஸ்லாம், 22, என்பவரை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற வெங்கடசாமி முயற்சித்தபோது வெங்கடசாமியை மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அஸ்லாம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.