/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஷோரூமில் திருடிய கார்களை விட்டு சென்ற மர்மநபர்கள்
/
ஷோரூமில் திருடிய கார்களை விட்டு சென்ற மர்மநபர்கள்
ADDED : டிச 20, 2024 12:53 AM
ஷோரூமில் திருடிய கார்களை விட்டு சென்ற மர்மநபர்கள்
கிருஷ்ணகிரி, டிச. 20-
கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி சத்யசாய் நகரை சேர்ந்தவர் நாசர், 39. இவர் கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணியளவில், ஷோரூமில் இருந்த, 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜீப், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். நாசர், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார்.
தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடி மற்றும் மாவட்டம் முழுவதும் அனைத்து போலீசாரையும் உஷார்படுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் காரிமங்கலம் சோதனைச்சாவடி அருகே காரையும், சூளகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் மேடுப்பள்ளி என்னும் இடத்தில ஜீப்பையும், மர்மநபர்கள் விட்டு விட்டு சென்றனர். போலீசார் வாகனங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.