/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'துணை ஜனாதிபதி மீதுவழக்கு பதிய வேண்டும்'
/
'துணை ஜனாதிபதி மீதுவழக்கு பதிய வேண்டும்'
ADDED : ஏப் 22, 2025 01:35 AM
தேன்கனிக்கோட்டை:தமிழக அரசிற்கு வழங்க வேண்டிய, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தளி, எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா பேசினர்.
தொடர்ந்து, எம்.பி., சுப்பராயன் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி, 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்து விட்டு, இத்திட்டத்திற்கு ஒதுக்கும் பணத்தை குறைத்து வருகிறார்.
மோடி அரசு ஏழை மக்களின் பரம விரோதி. பார்லிமென்டில் நாங்கள் எழுப்பிய குரலுக்கு, நிதியை விடுவிப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இன்னும், 15 நாட்களுக்குள் நிதியை விடுவிக்காவிட்டால், கடுமையான, வலிமையான போராட்டம் வெடிக்கும். துணை ஜனாதிபதி மீது உச்ச நீதிமன்றமே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும்.தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள மாநில சுயாட்சி என்ற கோஷத்தை, முழு மனதோடு வரவேற்கிறோம். அதை வலியுறுத்தும் இயக்கத்தில் முதல் நபராக நின்று போராடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.