ADDED : மே 09, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த ஜோடுகொத்தூரில் பெருமாள் கோவில் உள்ளது.
கடந்த, 6ல், பூஜை செய்ய பூசாரி குணசேகரன் கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவிலின் ஜன்னல் கம்பியை உடைத்து, உள்ளேயிருந்த உண்டியல் திருடு போனது தெரியவந்தது. புகார்படி கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.