/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஞ்., அலுவலகம் உள்பட மூன்று இடங்களில் திருட்டு
/
பஞ்., அலுவலகம் உள்பட மூன்று இடங்களில் திருட்டு
ADDED : பிப் 17, 2024 12:48 PM
வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட் ரோடு, வேப்பனஹள்ளி பேரிகை சாலையில், நாச்சிகுப்பம் பஞ்., அலுவலகம், சமுதாய கூடம், கிராம ஊராட்சி சேவை மையம் ஆகியவை அமைந்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு இந்த மூன்று இடங்களிலும் பூட்டுகளை உடைத்து பணம், தராசு உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.பஞ்., அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், பிரின்டர்களை திருடவில்லை. வேப்பனஹள்ளி போலீசார் அப்பகுதியிலுள்ள 'சிசிடிவி' காட்சிகளை சோதனையிட்டதில், டெம்போ வேனில் வந்த திருடர்கள், இரண்டு மணி நேரம் அதேசாலையில் சாவகாசமாக நின்று, ஒவ்வொரு இடத்திலும் திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.