/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாக்டர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
/
டாக்டர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
ADDED : அக் 30, 2024 01:13 AM
டாக்டர் வீட்டில்
10 பவுன் நகை, பணம் திருட்டு
கிருஷ்ணகிரி, அக். 30-
கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளி பஞ்., திருமலை நகரை சேர்ந்தவர் ரகுமான், 46, சித்தா டாக்டர். கடந்த, 27ல் வீட்டை பூட்டி விட்டு, போச்சம்பள்ளி அருகே உள்ள தன் சொந்த ஊரான கங்காவரத்திற்கு சென்றார்.
நேற்று முன்தினம் மாலை அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு
உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த டாக்டர் ரகுமான் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த, 10 பவுன் நகைகள், 5,000 ரூபாய், வெள்ளி பொருட்கள் திருட்டு போய்
இருந்தது.
அவர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.