/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீஸ் என கூறி 6 பவுன் திருட்டு
/
போலீஸ் என கூறி 6 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 06, 2024 06:41 AM
ஓசூர் : சூளகிரியில், போலீஸ் என கூறி மளிகைக்கடை உரிமையாள-ரிடம் இருந்த, 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்ன கொத்துாரை சேர்ந்தவர் ரங்கப்பா, 67. மளிகைக்கடை நடத்தி வருகிறார்; நேற்று முன்தினம் காலை தனது, 6 பவுன் தங்க நகையை இந்-தியன் வங்கியில் அடமானம் வைக்க, பையில் போட்டு பைக்கில் எடுத்து சென்றார். சூளகிரி பஜார் தெருவில் உள்ள ஓட்டல் அருகே நின்றிருந்த மூன்று பேர், தங்களை போலீஸ் என கூறி, உங்கள் மீது சந்தேகம் உள்ளது. உங்களது பையை சோதனை செய்ய வேண்டும் என ரங்கப்பாவிடம் கூறியுள்ளனர். அதனால் நகை இருந்த பையை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அதை பார்த்து விட்டு அவரிடமே கொடுத்த மூன்று பேரும், அங்கிருந்து சென்று விட்டனர்.
வங்கி அருகே சென்று பையை திறந்து பார்த்த போது, அதற்குள் இருந்த, 6 பவுன் நகையை காணவில்லை. அப்போது தான் தன்-னிடம் போலீஸ் என ஏமாற்றி, நகையை மர்ம நபர்கள் நுாதன முறையில் திருடி சென்றது ரங்கப்பாவிற்கு தெரிந்தது. சூளகிரி போலீசில் புகார் செய்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்-களில் உள்ள பதிவுகளை வைத்து, போலீசார் விசாரித்து வருகின்-றனர்.