ADDED : மே 09, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், அந்திவாடியை சேர்ந்த வேணுகோபால் மனைவி நந்தினி, 38; இவர் கடந்த, 6 மாலை, 5:30 மணிக்கு, அந்திவாடியில் இருந்து, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சில் வந்து இறங்கினார்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவரது கைப்பையில் இருந்த, 19,000 ரூபாய், 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன், 25,000 ரூபாய் மதிப்புள்ள அரை பவுன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றார். நந்தினி புகார்படி, ஓசூர் டவுன் எஸ்.ஐ., தனசேகரன், திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.