/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் கைது
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் கைது
ADDED : டிச 10, 2024 01:37 AM
தர்மபுரி, டிச. 10-
தர்மபுரியில் இருந்து நேற்று மாலை, 6:40 மணிக்கு கெட்டுப்பட்டிக்கு அரசு டவுன் பஸ், '5ஏ' தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி வழியாக சென்றது. பஸ்சை நுாலஹள்ளியை சேர்ந்த பெருமாள், 49 என்பவர் ஓட்டினார்.
இலக்கியம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, பஸ் சென்றபோது, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது, பஸ் உரசியதாக, ஆட்டோ டிரைவர்கள் இருவர், பஸ் டிரைவர் பெருமாளை தாக்கினர். இதை கண்டித்து, பெருமாள் மற்றும் அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர்கள், பஸ் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த, தர்மபுரி டவுன் போலீசார் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசி, ஆட்டோ டிரைவர்களான ஒட்டப்பட்டியை சேர்ந்த பிரவின், 29, நாகர்கூடலை சேர்ந்த முனுசாமி, 39 ஆகியோரை கைது செய்தனர்.

