/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிரைவரை தாக்கிய மூன்று பேர் கைது
/
டிரைவரை தாக்கிய மூன்று பேர் கைது
ADDED : நவ 06, 2024 01:14 AM
டிரைவரை தாக்கிய
மூன்று பேர் கைது
ஓசூர், நவ. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்தவர் முனிராஜ், 40, லாரி டிரைவர்; இவருக்கும், தேன்கனிக்கோட்டை பிரசாத் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி புட்டப்பா, 41, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த, 3 இரவு, 7:00 மணிக்கு முனிராஜ், அவரது அண்ணன் கண்ணன் மற்றும் அண்ணி ரத்னா ஆகியோர் வீட்டின் முன் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த புட்டப்பா தரப்பினர், முனிராஜ் உட்பட மூன்று பேரையும் தாக்கினர். இதில் காயமடைந்த மூன்று பேரும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முனிராஜ் கொடுத்த புகார்படி தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து புட்டப்பா, பிரகாஷ், 26, ஹேமந்த்குமார், 23, ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பட்டாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

