ADDED : ஜூலை 16, 2026 01:46 AM

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்,32; கூலித் தொழிலாளி.
இவர் கடந்த, 13ல், அதே-பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே, காவேரிப்பட்ட-ணத்தை சேர்ந்த மாதேஷ், 24, மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது, ஒரு பீர் பாட்டிலை தவறுத-லாக உடைத்து விட்டார். இதனால் கோவிந்தராஜ் மீது மற்ற-வர்கள் கோபமடைந்தனர். உடைந்த பீர் பாட்டிலால் கோவிந்த-ராஜன் முகத்தில் தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், அவரை தாக்கிய மாதேஷ், 24, மொட்டையன் கொட்-டாயை சேர்ந்த சூர்யா, 23, திம்மாபுரம் நிதிஷ்குமார், 23, ஆகிய மூவரை கைது செய்தனர். திம்மாபுரத்தை சேர்ந்த தமிழ் என்ப-வரை தேடி வருகின்றனர்.வனப்பகுதியில் குவியும் குப்பை
அரூர், ஜூலை 16
தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும், குடிமகன்கள் மது வாங்கி, அருகே உள்ள வனப் பகுதிக்கு சென்று, அருந்துகின்றனர். பின், அங்கேயே பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பாலிதீன் பை உள்ளிட்ட-வைகளை வீசி செல்வதால், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. மேலும், அரூர் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து, சாக்கு பைகளில் கொண்டு வரப்படும் கோழிக்கழிவுகள் உள்ளிட்-டவைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. வனப்பகு-தியில் குப்பை கொட்டுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
