தொழிலதிபரை கடத்திய வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
தொழிலதிபரை கடத்திய வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 25, 2026 05:54 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், புஷ்பகிரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்சுந்தரம், 42, தொழிலதிபர். இவர் கடந்த மாதம், 26ல், கந்திகுப்பம் அருகே சென்னை -- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை உபாதை கழிக்க தன் ஜீப்பை நிறுத்-தினார். அப்போது அங்கு, 3 டூவீலர்களில் வந்த, 8 பேர் கும்பல், அவரை கத்தியால் தாக்கி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.
அருள் சுந்தரம் புகார் படி, வழிப்பறியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி கொத்தபெட்டா காலனியை சேர்ந்த அசோக்குமார், 24, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த காதர் பாஷா, 22, சந்துார் முருகன் கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு, 23 ஆகி-யோரை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அனிதா பரிந்துரை படி, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் அடைக்கப்பட்ட, 3 பேரிடமும் கந்திகுப்பம் போலீசார் ஒப்படைத்தனர்.
