ADDED : ஆக 08, 2026 05:49 AM

பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் கென்னடி,50; இன்-ஜினியர். இவரது மனைவி எழிலரசி. இவர்க-ளுக்கு இரு மகன்கள் உள்ளனர். அனைவரும் குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகின்-றனர். ஆண்டுக்கு இரு முறை இங்கு வந்து செல்-வது வழக்கம். கடந்த ஜூன், 21ல் கென்னடி, லண்-டனில் இருந்து அதிகாரப்பட்டி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த, 6ம் தேதி காலை காரில் வந்த சிலர் வீட்டில் இருந்த கென்னடியை கடத்திச் சென்றனர். தோட்டக்காரர் அங்குராஜ் புகார்படி, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.இதில், காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகுலத்த-லாஞ்சேரியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் மரி-யதாஸ், 62, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த முகிலன், 33, சென்னை வண்ணாரப்-பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ், 52, ஆகிய மூவரும் கென்னடியை கடத்தி சென்றது தெரிய -வந்தது. இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு, வாணியம்பாடி அருகே அன்று இரவே கென்னடியை மீட்டனர். கடத்திய மரி-யதாஸ், முகிலன், வெங்கடேஷ் ஆகிய மூவ-ரையும் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த, 2001ல், கென்னடி சென்-னையில் பணியாற்றியபோது மரியதாசிடம், தன் நிலத்தின் மேல், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை தராமல் லண்டன் சென்று விட்ட-தாகவும், கென்னடி வருவதை அறிந்த மரி-யதாஸ், பணத்தை பெறுவதற்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
