ADDED : நவ 11, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்: தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சூரியநாராயணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பாளையம் சுங்கச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 185 கிலோ எடை கொண்ட, 1.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இன்னோவா கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தொப்பூர் போலீசார், காரிலிருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குணாளன், 19, சஞ்சய், 19, கவின் ராஜ், 23 ஆகிய மூவரை கைது செய்தனர்.

