ADDED : செப் 26, 2026 05:55 AM
பேரிகை; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை அருகே பீமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்-தவர் மூர்த்தி, 35, டிரைவர்; இவரது மனைவி பவித்ரா, 25. இவர்களுக்கும், உறவினர்களான மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்ததால்,
கிராம மக்கள் அவர்களை சமா-தானம் செய்தனர். கடந்த, 22ம் தேதி மூர்த்தி மற்றும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தக-ராறு ஏற்பட்டது. இதில் மூர்த்தி மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டனர்.மூர்த்தி புகார்படி, பீமனப்பள்ளியை சேர்ந்த ரவி, 37, முனிகிருஷ்ணன், 33, ராமன், 26, லட்சுமணன், 26, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்த பேரிகை போலீசார், ரவி தவிர மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். அதேபோல், தன்னையும், தனது மனைவி கோகிலா, 30, என்பவரையும் தாக்கிய-தாக ரவி கொடுத்த புகார்படி, மூர்த்தி மற்றும் அவரது மனைவி பவித்ரா மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
