தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/2 மாணவியர் உட்பட மூவர் மாயம்

2 மாணவியர் உட்பட மூவர் மாயம்

2 மாணவியர் உட்பட மூவர் மாயம்


ADDED : அக் 04, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: ஓசூர் அருகே வசிப்பவர், 18 வயது இளம் பெண். தனியார் கல்-லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல் முதலாமாண்டு படிக்-கிறார். கடந்த, 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தந்தை நேற்று முன்தினம் பாகலுார் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், ஓசூர் அடுத்த நந்திமங்-கலம் அருகே

தேவிசெட்டிப்பள்ளியை சேர்ந்த நானி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்-கின்றனர்.ஓசூரை சேர்ந்தவர், 16 வயது இளம்பெண்; அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார்; கடந்த, 1ம் தேதி மதியம், 1:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தந்தை ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், அரசு பள்-ளியில் பிளஸ் 1 படிக்கும், 17 வயது மாணவன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வரு-கின்றனர்.

தளி அடுத்த ஜவளகிரி அருகே சென்னமாலம் கிராமத்தை சேர்ந்-தவர் சிவக்குமார் மனைவி பிபுஸ்ரீ, 27. கடந்த, 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே

சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் புகார் படி, தளி போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us