ADDED : ஏப் 25, 2026 05:35 AM
ஓட்டு எண்ணும் மையத்திற்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு எண்ணும் மையத்தில், 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது:
ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளின் முன்புறம், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல், மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் என, 297க்கும் மேற்பட்டவர்கள் கல்லுாரி வளாகத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி
வருகின்றனர்.
