/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.சாண்ட், கல் கடத்திய மூன்று லாரிகள் பறிமுதல்
/
எம்.சாண்ட், கல் கடத்திய மூன்று லாரிகள் பறிமுதல்
ADDED : ஆக 18, 2025 02:19 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அகரம் முருகன் கோவில் அருகே தியானதுர்க்கம் வி.ஏ.ஓ., செந்தில் மற்றும் துப்பு-கானப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வி.ஏ.ஓ., சரவணன் ஆகியோர் தனித்தனியாக வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளில் சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஓசூருக்கு, ஒரு லாரியில், 2 யூனிட்டும், மற்றொரு லாரியில், 5 யூனிட்டும் எம்.சாண்ட் கொண்டு செல்வது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரிகளின் டிரைவர்கள், உரிமையா-ளர்களை தேடி வருகின்றனர்.
சூளகிரி அடுத்த பிள்ளைகொத்துார் கிராமத்தில், நல்லகானகொத்-தப்பள்ளி வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், பிள்ளை கொத்துாரில் இருந்து சூளகி-ரிக்கு, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் கற்களை ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்து, சூளகிரி போலீசில் ஒப்ப-டைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.