நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கிருஷ்ணகிரியில், காற்று இன்றி ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதேபோல் நேற்று மாலை, 7:30 மணிக்கு, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பகல் முழுவதும் அனல் காற்று வீசிய நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், கிருஷ்ணகிரி குளிர்ந்தது.