தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புலிகள் கணக்கெடுப்பு கேமராக்கள் திருட்டு

புலிகள் கணக்கெடுப்பு கேமராக்கள் திருட்டு

புலிகள் கணக்கெடுப்பு கேமராக்கள் திருட்டு


ADDED : செப் 13, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ராயக்-கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் மேற்கு பீட்டில் வன காப்பாளராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார், 46. ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், புலிகள் மற்றும் மற்ற விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிந்து கணக்கெடுக்க, 10 இடங்களில் கண்-காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த, 9ம் தேதி ரோந்து சென்ற சதீஷ்குமார், இரு கேமராக்கள் திருட்டு போனதை கண்டறிந்தார். அதன் மதிப்பு, 25,000 ரூபாய். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில், வன காப்பாளர் சதீஷ்-குமார் நேற்று புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்குப்ப-திந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us