ADDED : நவ 27, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொ.மு.ச.,
ஆலோசனை கூட்டம்
ஓசூர், நவ. 27-
ஓசூரிலுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில்,
தொ.மு.ச., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும், தி.மு.க.,வை ஆட்சி பொறுப்பில் அமர வைக்க, தெ.மு.ச., நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் கிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.