/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்கள் பிரச்னைகள் தீர அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
/
மக்கள் பிரச்னைகள் தீர அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
மக்கள் பிரச்னைகள் தீர அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
மக்கள் பிரச்னைகள் தீர அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
ADDED : ஏப் 06, 2024 04:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்கள் பிரச்னைகள் தீர வெற்றி பெற செய்யுங்கள் என, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ் பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, மேற்கு மாவட்டசெயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஜெகதேவி, சூலாமலை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட பஞ்.,களில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க., அரசு. அந்த திட்டங்களை கெடுப்பவர்கள் தான் தி.மு.க., அவர்களுடன் தற்போது காங்.,கட்சியும் சேர்ந்துள்ளது. தேசிய கட்சிகளை நம்பி அ.தி.மு.க., இல்லை. தமிழகத்தின் பிரச்னைகளை அ.தி.மு.க., தீர்த்தது போல், நாட்டில் எந்த கட்சியும் வேறு எந்த பிரச்னையும் தீர்க்கவில்லை. கச்சத்தீவு பிரச்னையை பற்றி தற்போது பா.ஜ., பேசுகிறது. அ.தி.மு.க., வெற்றி முனைப்பில் இருப்பதை தெரிந்து கொண்டு, கச்சத்தீவு பிரச்னையை எடுப்பதும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை, பா.ஜ.,வினர் புகழ்ந்து பேசுவதும் ஓட்டுகளை பெறுவதற்கான நாடகம். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் எப்போதுமே அ.தி.மு.க.,முன்னின்றுள்ளது. எனவே வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களை அளித்து என்னை வெற்றி பெறசெய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

