/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்; அண்ணாமலை
/
கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்; அண்ணாமலை
கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்; அண்ணாமலை
கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்; அண்ணாமலை
ADDED : ஜன 11, 2024 11:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூரில் நேற்று என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
என் மண் என் மக்கள் யாத்திரை, 147வது சட்டசபை தொகுதியாக கிருஷ்ணகிரியில் நடக்கிறது. கிருஷ்ணகிரியில் காமராஜர் ஆட்சி காலத்தில், 40 ஆயிரம் எக்டேர் விவசாய நிலத்தில் பாசன வசதி பெறும் வகையில் கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டது. பிரதமர் மோடி மட்டும்தான் சபர்மதி உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டத்தை வகுத்தார்.
சமூகநீதி பற்றி பேசும் தி.மு.க., மாவட்டத்தில் எந்த சமூகத்தினர் அதிகமாக உள்ளார்களோ, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்குகிறது. தென் மாவட்டங்களில் மழை, வெள்ளம் வரும்போது முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணியில் கலந்து கொள்கிறார். தன் மகன் உதயநிதியை வெள்ள பகுதிகளுக்கு அனுப்புகிறார். அவர் தன்னை படத்தில் நடிக்க வைத்த சினிமா இயக்குனரை அழைத்து செல்கிறார். கலெக்டர் அதிகாரிகள் பின்னால் நிற்கிறார்கள். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை போல், ஒரு ஆட்சி வேண்டுமென்றால் அது மோடியால் மட்டும் தான் வழங்க முடியும். வரும் லோக்சபா தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரை மோடியாக நினைத்து, பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.