ADDED : ஜூன் 22, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் போலீசார், காருபலா பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, மளிகைக்கடையில் புகையிலை பொருட்களை வைத்து விற்றதாக, பட்டா குருபரப்பள்ளியை சேர்ந்த சங்கர், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல், கொடிதிம்மனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, கர்நாடகா மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றதாக, அப்பகுதியை சேர்ந்த தேவராஜ், 20, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 15 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.