நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து சரிவு மற்றும் வெளி-மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் குவிந்து வருவதால், தக்காளிவிலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
இம்மாத துவக்கத்தில், ஒரு கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு விற்ற நிலையில் நேற்று முன்-தினம், 60 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று காலை, ஒரு கிலோ தக்காளி அதிரடியாக, 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி வரத்து குறைவதால், விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.