நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தக்காளி
விலை சரிவு
தர்மபுரி, டிச. 11-
தர்மபுரி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கன மழையால், விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், காய்கறிகளின் விலை உயர்ந்தது. மாவட்டத்தில் பெரியாம்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
மழையால் விவசாயிகள் சந்தைக்கு தக்காளியை கொண்டு வர முடியாத நிலையால், கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் என விற்றது. மழை நின்ற பின், மாவட்ட உழவர்சந்தைகளுக்கு தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
இதனால், ஒரு கிலோ தக்காளி நேற்று முன்தினம், 35 ரூபாய்க்கும், நேற்று, 28 எனவும் விற்பனையானது. தக்காளி  விலை சரிவால், சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

