ADDED : ஜூன் 05, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி வி.ஏ.ஓ., மகபூப் ஜான் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்-தினம் குண்டுக்குறுக்கி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அங்கு ஒரு டிராக்டரை கற்களை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது.
இதைய-டுத்து அந்த டிராக்டரை வி.ஏ.ஓ., மகபுப் ஜான் மறித்தபோது, டிராக்டரை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பினார். வி.ஏ.ஓ., மகபுப் ஜான் புகார் படி, ஒரு யூனிட் கற்களுடன் டிராக்டரை, சூளகிரி போலீசார் பறிமுதல் செய்து, தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.
