ADDED : செப் 24, 2024 01:36 AM
ஓசூர்: ஓசூர் ராம்நகரில், எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டபிள்யூ.பி.டி.யு.சி., ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.பி.எப்., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர்
மாதையன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட பொதுச்செய-லாளர் முனிராஜ், டபிள்யூ.பி.டி.யு.சி., சங்க பொதுச்செயலாளர் சக்-திவேல் ஆகியோர் தலைமை வகித்து பேசினர். ஆர்ப்பாட்-டத்தில், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தப்பட்ச ஊதியம், 26,000 ரூபாய்க்கு குறையாமல்
நிர்-ணயம் செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்-களில் காலியாக உள்ள, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்-களை நிரப்ப வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி
கோஷங்களை எழுப்பினர்.

