ADDED : நவ 27, 2024 12:59 AM
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ஓசூர், நவ. 27-
ஓசூர், ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எஸ்.கே.எம்., ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை சார்பில், மத்திய அரசை கண்டித்து, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் மாதையன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் முனிராஜ் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், 3 குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். குறைந்தப்பட்ச ஊதியம் மாதத்திற்கு, 26,000 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் கிருஷ்ணன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

