sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

/

அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்


ADDED : ஜன 30, 2026 04:43 AM

Google News

ADDED : ஜன 30, 2026 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் அனுமதியின்றி வைத்திருந்த கடைகளை அகற்றச்சென்ற மாநகராட்சி அலுவலர்களுடன், வியா-பாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் மீன்கள் வியாபாரம் செய்ய, 158 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஏராளமான கடைகளை வியாபாரிகள் டெண்டர் எடுத்து வியா-பாரம் செய்து வருகின்றனர். ஒரு சிலர், டெண்டர் எடுக்காமல் மார்க்கெட்டில் அனுமதியின்றி வெளிப்பகுதியில் காய்கறி வியா-பாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதி-காரிகளுக்கு புகார்கள் சென்றது. ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஷபீர் ஆலம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்-போது டெண்டர் எடுத்து கடை வைக்காத வியாபாரிகளின் காய்-கறி கடைகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ஷபீர் ஆலம் உத்த-ரவிட்டார். இதையடுத்து டெண்டர் எடுக்காமல் கடை வைத்தவர்கள், அவர்களாகவே தங்கள் கடைகளை அகற்றினர். மற்ற கடைக-ளுக்கு சென்ற மாநகராட்சி கமிஷனர், கடையின் முன் அமைத்-துள்ள ஷெட்டுகளை அகற்ற கூறினார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பா.ம.க.,வினர் கமிஷனர் ஷபீர் ஆலமிடம் வாக்குவாதத்தில்

ஈடுபட்டனர்.

கமிஷனர் உத்தரவுப்படி, கடைகளுக்கு முன்னால் அமைக்கப்-பட்டிருந்த ஷெட்டை அகற்ற சென்றபோது, அதை அகற்ற விடாமல் அலுவலர்களுடன் வியாபாரிகள் தொடர்ந்து வாக்குவா-தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் ஓரிரு நாட்களில் ஷெட்களை அகற்றுமாறு கூறி விட்டு அலுவ-லர்கள் சென்றனர்.






      Dinamalar
      Follow us