/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடம் பெயரும் யானைகள் பயிர்கள் சேதத்தால் சோகம்
/
இடம் பெயரும் யானைகள் பயிர்கள் சேதத்தால் சோகம்
ADDED : டிச 22, 2025 08:24 AM

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 40க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்பா வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் அதிகாலை விரட்டப்பட்டன.
யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், அன்றிரவு வெளியேறிய யானைகள், புதுார், லட்சுமிபுரம், இருளப்பட்டி, கம்பள்ளி, கொத்துார், மல்லேபாளையம், பொம்மதாத்தனுார், ஒன்னுக்குறுக்கை, பெரியபாலேகுழி வழியாக, ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன.
யானைகள் சென்ற கிராமங்களில் ராகி, சோளம், வெள்ளரிக்காய், தக்காளி பயிர் சேதமாகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனச்சரகங்களில் பிரிந்து திரியும் யானைகளை ஒன்றிணைத்து, கர்நாடக மாநில வனத்துக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

