/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அசோலா உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
அசோலா உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 26, 2025 06:04 AM
ஓசூர்: சூளகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி சார்பில் அசோலா உற்பத்தி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்-பட்டது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இளமறிவியல், 4ம் ஆண்டு கல்லுாரி மாண-வியர் குழுவினர் அப்பகுதியிலுள் விவசாயிகளுக்கு பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப விவசாய செயல்முறை மற்றும் பயிர் திட்-டங்களை எடுத்துரைத்தனர்.
சூளகிரி வட்டத்தில் உள்ள காமன்தொட்டி கிராமத்தில், அசோலா உற்பத்தியின் பயன்கள் பற்றியும் விவரித்தனர். அசோலா உற்பத்தி என்பது, நீரில் மிதக்கும் பெரணி வகை தாவ-ரத்தை வளர்ப்பதாகும். இது கால்நடைகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனமாகவும், நெல் வயல்களில் இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதை வளர்க்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு, மாணவியர் பயிற்சி அளித்தனர்.

