தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 05, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை, தமிழகம் முழுவதும், 'குரூப் - 4' தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் தேர்வர்களின் கையெழுத்து மாறுபடுதல் மற்றும் அவர்கள் கையெழுத்து போடாமல் விடுவதால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வருவாய் துறை சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., ஓ.எம்.ஆர்., ஷீட் எளிய முறையில் பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

மண்டல துணை தாசில்தார் ஜெயராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், பிரிவு அலுவலர் நேரு, உதவிப்பிரிவு அலுவலர் குணசேகரன் ஆகியோர், ஓ.எம்.ஆர்., ஷீட்டை தேர்வர்கள் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து எடுத்துரைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us