ADDED : ஜன 29, 2026 07:33 AM
அ நிறம் | அளவு
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண்மைத்துறை சார்பில், சாமனப்பள்ளி கிராமத்தில் பசு மாட்டிற்கு ஏற்படும் மடிவீக்க நோயை கட்டுப்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி இளமறிவியல் நான்காமாண்டு மாணவியர், 12 பேர் கொண்ட குழுவினர், மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய் குறித்தும், அதை குணப்படுத்த சோற்றுக்கற்றாழை, மஞ்சள் துாள் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை, மாட்டின் மடியில் வீக்கம் குறையும் வரை தினமும், 10 முறை தடவ வேண்டும் என, விவசாயிகளுக்கு விளக்கி கூறி, செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
