ADDED : ஏப் 04, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை - திருப்-பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகேயுள்ள, மின்சார டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பி-லான காப்பர் கம்பி, ஆயில் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து மின்-சார துறையினர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். ஆள் நடமாட்டம், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் திருட்டு போனது, பரப-ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
