sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புதையல் வேட்டை: 4 பேர் கைது

/

புதையல் வேட்டை: 4 பேர் கைது

புதையல் வேட்டை: 4 பேர் கைது

புதையல் வேட்டை: 4 பேர் கைது


ADDED : மார் 08, 2026 07:22 AM

Google News

ADDED : மார் 08, 2026 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த கும்ளாபுரம் அருகே, ஜிகூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில், பாறைகளை உடைத்து புதையல் எடுக்க முயற்சி நடப்பதாக, தளி போலீசா-ருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ., ராஜா சங்கிலிகருப்பன் மற்றும் போலீசார், பாறைக்கு பூஜை செய்து கொண்டி-ருந்த பெண் உட்பட, 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், பாறையை உடைக்க வைத்திருந்த, 43 டெட்டெ-னேட்டர் குச்சிகள், மெக்கர் பாக்ஸ் மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நான்கு பேரிடமும் விசாரித்த போது, தளி அருகே ஒன்னட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாருதி, 37, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே மஞ்சனப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழி-லாளி வேணு, 38, பெங்களூரு ஒசகோட்டையை சேர்ந்த லாவண்யா, 39, தேவனஹள்ளி பையபுரா பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார், 24, என்பது தெரிந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்-தனர்.

தளி அருகே பேலகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்-கடேஷ் என்பவர், பாறையின் அடியில் புதையல் இருப்பதாக கூறியதாகவும், அதன் பேரில் கடந்த, 4 மாதங்களாக அப்பகு-தியை நோட்டமிட்டு, புதையலை எடுக்க நேற்று பூஜை செய்த-தாக கைதான, 4 பேரும் தெரிவித்தனர். இதில், லாவண்யா தன்னை பத்திரிகை நிருபர் என கூறியுள்ளார். அதனால், அவர் எந்த பத்திரிகையில் பணியாற்றி வருகிறார் என, போலீசார் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us