ADDED : ஜூன் 07, 2026 04:00 AM

அ நிறம் | அளவு
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்-சூழல் தினத்தையொட்டி, 'டீல்' நிறுவனத்துடன் இணைந்து, பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, 'டீல்' பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வைத்-தனர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மொத்தம், 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டு, அதை பராமரிப்பதாக உறுதிமொழி ஏற்று கொண்டனர். அப்போது பேசிய பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, பள்ளி வகுப்பறைகள் அருகே மண்பா-னைகளில் செடிகளை வளர்த்து பராமரிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
