ADDED : செப் 02, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
ஓசூர்,:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் கிருஷ்ணா நகர் வரசித்தி விநாயகர், துர்க்கை அம்மன்
கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு
சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரம் நடந்தன.
தொடர்ந்து,
இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், பசுமையை அதிகரிக்கும்
வகையிலும், கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு,
இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மரக்கன்றுகளை வீடுகளுக்கு
அருகில் நட்டு, தொடர்ந்து பராமரித்து வளர்க்குமாறு, கோவில்
நிர்வாகம் சார்பில் பக்தர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் தலைவர்
பொன்னுசாமி, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முருகன், இணை செயலாளர்
பிரபு மற்றும் கோவில் அர்ச்சகர் சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.
