கலெக்டர் தினேஷ்குமார்: வரும், 28ல், 'மா' விற்கு விலை நிர்யணம் செய்ய விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் கூடிய முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. இதில், 'மா' விவசாயிகள் பங்கேற்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி அணையின் பாசன பரப்பு அதிகரித்துள்ளது. எனவே, வலது மற்றும் இடது புறக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்திட வேண்டும்.
பாலேகுளி -சந்துார் ஏரி கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு: மாங்கனி கண்காட்சி உரிய நேரத்தில் தொடங்க வேண்டும். பாலேகுளி -சந்துார் ஏரி வரை உள்ள, 28 ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் பகுதி மழையால் சேதமாகி உள்ளதை சீரமைக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக நிலம் வழங்கியவர்களில், நாகரசம்பட்டி டவுன் பஞ்.,ல் மட்டும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
கலெக்டர் தினேஷ்குமார்: மாங்கனி கண்காட்சி, மே 2வது வாரத்தில் தொடங்கும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, கால்வாய் சீரமைக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது. இணை இயக்குனர்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) இந்திரா மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.