ADDED : மார் 13, 2026 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒருங்கிணைந்த மாவட்ட, த.வெ.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேலு தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சசி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
* தர்மபுரி மாவட்ட, த.வெ.க., சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமை வகித்தார்.

