ADDED : நவ 28, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குனர் தமிழரசன்
மற்றும் அதிகாரிகள், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே தேவீரப்பள்ளியில்
உள்ள சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டில், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அப்போது
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய
அனுமதி சீட்டு இல்லாமல், 6 யூனிட் எம்.சாண்டை, பெங்களூருக்கு கொண்டு
செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார்
ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவர்,
உரிமையாளரை தேடி வருகின்றனர்.
