ADDED : நவ 11, 2025 06:33 AM
காரிமங்கலம்: பன்னியாண்டி சமூக மக்களின் வாழ்வுரிமையான ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, காரிமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன், த.வா.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலக்கோடு சட்டசபை தொகுதி செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் தவமணி பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்களுக்கு மக்களுக்கு எஸ்.சி., ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பன்னியாண்டி சமூக மக்களுக்கு எஸ்.சி.,சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் இச்சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி படிக்க முடியாமலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றியும், சுயதொழில் செய்பவர்கள் போதிய கடன் மாணியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க, தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்னியாண்டி சமூக மக்களுக்கு உடனடியாக எஸ்.சி., ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். இதில், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

